யாழ் செம்மணிப் பகுதியில் கிலோக் கணக்கில் கஞ்சா கடத்தியவருக்கு நடந்த கதி!

121

யாழ்ப்பாணம், செம்மணிப்பகுதியில் இன்று (9) சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தென்மராட்சிப் பகுதிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் கர்சன் சமரக்கோன் தலைமையிலான அணியினரோடு துரிதமாக செயற்பட்ட குற்றப்புலனாய்வுப் பொலிஸார் செம்மணிப் பகுதியில் வைத்து 37 வயதான ஒருவரைக் கைது செய்தனர். அவர் எழுதுமட்டுவாழ் பகுதியைச் சேர்ந்தவர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 14 கிலோ 610 கிராம் நிறையுடைய கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டத