வன்னியில் வாழ்கின்ற பலர் இரும்பு மனிதர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உடல்களில் சதையும்,இரத்தமும், எலும்போடு சேர்ந்து இரும்பு துண்டுகளும் காணப்படுகிறது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஓரிரு வருடங்கள் இரும்புத் துண்டுகளுடன் வாழ்வது கடினமாகவும், வலி மிகுந்ததாக இருந்த போதும், தற்போது அவற்றுடன் மக்கள் வாழப் பழகிக்கொண்டார்கள்.

இந்த எக்ஸ்ரேவுக்குரிய பெண் நான்கு பிள்ளைகளின் தாய், மாங்குளம் தட்சடம்பன் பகுதியில் வசிக்கின்றார். தனது காலில் துப்பாக்கி குண்டு ஒன்றுடன் வாழ்ந்து வருகின்றார். அவ்வவ்போது வலிகள் ஏற்படுகின்ற போதும் அதனுடன் வாழ பழக்கிக்கொண்டேன் என்கின்றார். அறுவை சிகிசை மூலம் எடுத்தால் காலுக்கு ஆபத்து என்று வைத்தியசாலையில் சொன்னதாகவும் சொல்கின்றார். பிள்ளைகள் ஒரு நிலைக்கு வரும் வரை இந்த வலிகளுடன் வாழ்ந்துவிட்டு போய்விடுவோம் என்ற மனநிலையில் உள்ளார்.

இப்படிதான் எங்கள் சமூகத்தில் பலர். உடலில் மட்டுமல்ல இரும்பு. மனதையும் இரும்பாக்கிக்கொண்டு வாழப் பழகிவிட்டார்கள்