யாழ்ப்பாணத்தில் உள்ள கொள்ளையர்களுடன் பொலிசார் மிக நெருங்கிய தொடர்பில் உள்ளனர். யாழில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குற்றவாளிகள் ஏதோ ஒரு காரணத்தால் சிறைக்குள் செல்கின்றார்கள். அங்கு அவர்கள் ஒன்று சேர்ந்து தமது பகுதிகளில் உள்ள பணக்காரர்கள் மற்றும் தனியாக ஆதரவற்று உள்ளவர்களின் விபரங்களை மற்ற கொள்ளையர்களுக்கு தகவலாகக் கொடுத்து அவர்களை வைத்து தமது பகுதிகளுக்குள்ளேயே கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடிப்பதை விட அங்கு அழகாக உள்ள பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் கேவலத்தையும் குறித்த கொள்ளையர்கள் அரங்கேற்றுகின்றனர். அப்படியானவர்களை பொதுமக்களே பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தாலும் பொலிசார் அவர்களைக் கைது செய்வதில்லை. ஏனெனில் பொலிசாருக்கும் குறித்த கொள்ளையர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் யாழ் வரணியில் கொள்ளையடித்தவர்களை பிடித்த இளைஞர்கள், கொள்ளையடித்த வீடு தொடர்பாக கொள்ளையனுக்கு தகவல் வழங்கியவனையும் கொள்ளையர்களிடம் கேட்டு அவனை நையப்புடைத்து பொலிசில் ஒப்படைத்தனர். இருந்தும் பொலிசார் அவனைக் கைது செய்யாது அவனுக்கு அடித்த இளைஞர்களை கைது செய்ய முயன்று வருகின்றனர். இவ்வாறான நிலையில் பொலிசாருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்று வருகின்றனர். வரணியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என மீசாலையிலுள்ள வீட்டில் மடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரை, தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். வரணி இயற்றாலையில் கடந்த 4ம் திகதி திருட்டு சம்பவம் நடந்தது. இதில் ஈடுபட்ட இருவர், வீட்டிலிருந்த வெளிநாட்டு மதுவை அருந்தியதால் நிதானமிழந்து சிக்கிக் கொண்டனர். அவர்களிற்கு தகவல் வழங்கியதாக கூறப்படும் நபர் தப்பித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் மீசாலையிலுள்ள அவரது வீட்டுக்கு சென்ற இளைஞர்கள் அவரை அடித்து, கைகளை பின்னால் கட்டி வீதிவீதியாக இயற்றாலை வரை இழுத்து வந்தனர். அவர் நையப்புடைக்கப்பட்டதில் கடுமையான காயமடைந்தார். பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரிடம் நேற்று பொலிசார் வாக்குமூலம் பதிவுசெய்தனர். தனது வீட்டின் முன்னாலுள்ள இளைஞன் ஒருவனே தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, கொள்ளை சந்தேகநபரை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்று அந்த அளைஞன் கைதாகி, நீதிவானின் இல்லத்தில் முற்படுத்தினர். அவரை ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டார். வழக்கு எதிர்வரும் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கீழே உள்ள வீடியோவில் வரணிப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட திருடனே உண்மையை ஒத்துக் கொண்ட போதும் பொலிசார் அவனைக் கைது செய்யாமல் விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.