மாப்பிள்ளைக்கு தான் எப்பிடி இருந்தாலும் பொம்பிளை வெள்ளையா இருக்கோணும், மெலிசா இருக்கோணும், நல்ல வடிவா இருக்கோணும், நல்ல முடி இருக்கோணும், நல்ல சீதணம் வேணும். இதில ஒன்டு குறைஞ்சாலும் வேற வரன் தேடுறது. எனக்கு இதொண்டும் அவசியமில்ல. நல்ல குணமான பிள்ளை தான் வேணும் என்டு யார் இப்ப தேடுறாங்கள்? குணத்தைப்பற்றி எந்த கவலையும் இல்லை. இதெல்லாம் மட்டும இருந்தா போதும் எண்டு கல்யாணம் கட்டினா இப்பிடி தான் நடக்கும். அப்பிடி பார்க்கிறவங்கள் இதையும் ஏற்க தானே வேணும். குணத்தை பார்த்து வாழ்க்கைத்துணைய தேர்ந்தெடுக்கிறவங்கள் நல்லா தான் வாழுறாங்கள். சந்தோஷமா. அழகுக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுப்பது ஆபத்து தான்.