இலங்கைக்கு உத்தியோகபூா்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமா் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அமா்ந்திருந்த விதம் தொடா்பாக விமா்சனங்கள் எழுப்பபட்டு வருகின்றது.

குறிப்பாக இந்திய தரப்பினருக்கு எதிாில் அமா்ந்திருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் மிகுந்த பயபக்தியுடன் இருப்பதுபோல் நுனி கதிரையில் கைகளை கோா்த்தபடி அமா்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இந்த புகைப்படங்களை

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி எஜமான்கள் மீது அவ்வளவு விசுவாசமா? கொஞ்சம் ஆசுவாசமாக அமா்ந்தால் என்ன? என விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது