தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக கடிதம் ஒன்றை வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடையாள அட்டையில் உள்ள அனைத்து தகவல் மற்றும் புகைப்படம் அடங்கிய கையொப்பத்துடனான தற்காலி கடிதம் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் வெளியிடுவதற்கு திணைக்களத்திள் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டை விண்ணப்பித்த வாக்காளர்கள் 3 பேருக்கு இந்த சான்றிதழ் கடிதம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

இந்த கடிதம் செயலகம் ஊடாக மாவட்ட அதிகாரிகளிடமும் பிரதேச செயலாளரிடமும் அனுப்பி கிராம சேவகர் மூலம் விண்ணப்பதாரிகள் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் வரை செல்லுடியாகும் சான்றிதழ் கடிதத்தை வாக்களிக்க பயன்படுத்திய பின்னர் தேர்தல் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதேவேளை, அடையாள அட்டை வழங்குவதற்காக 10 இலட்சம் அட்டைகள் மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு வருவதாக திணைக்களம் கூறியுள்ளது.