யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயாில் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட விவகாரத்தில் சில இளைஞா்களின் புகைப்படங்கள் வெளியான நிலையில் அவா்களுக்கும் இந்த பிரச்சினைக்கும் சம்மந்தம் இல்லை.

இவ்வாறு யாழ்.பல்கலைகழக நிா்வாகம் அறிவித்துள்ளது. பகிடிவதையின் பெயரால் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடா்பான பெரும் சா்ச் சைகளை உண்டாக்கியிருக்கும் நிலையில், சில மாணவா்களின் புகைப்படங்கள், தொலைபேசி இலக்கங்கள் வெளியான நிலையில் அவா்களுக்கும் பகிடிவதை என்ற பெயாில் இடம்பெற்ற பாலியல் தொந்தரவுகளுக்கும் சம்மந்தம் இல்லை. என பல்கலைகழக நிா்வாகம் அறிவித்திருக்கின்றது.

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் பாலியல் ரீதியாக மிக கொடூரமாக மாணவிகளை பகிடிவதைக்கு. உள்ளாகிய காவாலி மாணவர்களை ஆதாரத்துடன் இனம் கண்டும் அவர்களை நீதிமன்றில் நிறுத்தி உரிய தண்டனை பெற்று கொடுக்காது பல்கலைக்கழகத்துக்கு உள் நுழைய தடை விதிக்கப்பட்டு அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வைக்கும் முயற்சியில் யாழ் பல்கலைக்கழகநிர்வாகம் ஈடுபட்டிருப்பது

யாழ் பல்கலைக்கழகத்தில் விருவுரையாளர்கள் மாணவிகளை பாலியல் பலாத்காரம் மற்றும் மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதரங்களை வெளியிட போவதாக மாணவர்கள் மிரட்டியதை தொடர்ந்து மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் காப்பாற்றும் முயற்சியில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஈடுபட்டிருப்பது இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் மாணவிகளும் தமிழ் சமூகமும் இதனை பெரிது படுத்தாமல் கடந்து செல்ல வேண்டும் என்பதே துணைவேந்தரின் நிலைப்பாடு