யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள இராசம்மா திருமண மண்டபத்துக்கு முன்னதாக உள்ள இராசம்மா விடுதியில் அண்மைக்காலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பிரதேச செயலக கலாச்சார பிரிவுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாச்சாரஉத்தியோகர்கள் மற்றும் அப்பகுதி கிராம அலுவலர்கள் குறித்த விடுதிக்குள் நுழைந்து சோதனை நடத்தியபோது விடுதிக்குள் அறைக்குள் தம்பதிகளாக இருந்த இருவர் கலாச்சார உத்தியோகத்தர்களால் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.

பிடிபட்டவர்கள் தாங்கள் திருமணமாகியதாகவும் எனினும் பதிவு திருமணம் செய்யவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்கள்.

அதில் ஒருவர் சாட்டியினை வசிப்பிடமாகவும் மற்றையவர் வெளி மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனினும் யாழ்ப்பாண பிரதேச செயலர் இருவரையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த இராசம்மா திருமணம மண்டபத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளதாகவும் இங்கு குறித்த மண்டபத்தை பொறுப்பெடுத்த முகாமையாளராகச் செயற்படும் ஒருவரே இவ்வாறான கேவலத்தைப் புரிந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த விடுதியில் தங்கியிருந்த 17 வயதான சிறுமிக்கு 5 மாத பெண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது. அந்த சிறுமியின் கணவர் என நடித்துக் கொண்டு அந்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஒருவனும் பிடிக்கப்பட்டுள்ளான். குறித்த சிறுமியைப் போல பலரை அந்த விடுதி முகாமையாளன் பாலியல் தேவைக்காக பலருக்கு கொடுத்து வந்துள்ளார் என பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் பெண் ஆளுநர் ஒருவர் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது இவ்வாறான கேவலங்கள் அரங்கேறுவது ஆளுநருக்கு சவாலான ஒன்றாக அமையும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகின்றன. குறித்த விடுதியை வைத்திருப்பவன் அரசியல்செல்வாக்கு மிக்கவன் என தன்னை இனம்காட்டி வைத்துள்ளதாகவும் இவன் யாழ் மாநகரசபையில் குறித்த விடுதியை முறைப்படி பதிவு செய்துள்ளானா? என்பது தொடர்பாக மாநகரசபை அதிகாரிகள் ஆராய வேண்டும் எனவும் அல்லாதுவிடின் உடனடியாக விடுதியை மூடி சீல் வைக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் பலர் பதிவிட்டவண்ணம் உள்ளார்கள்


,