விபத்தை ஏற்படுத்தும் வகையில் இ.போ.ச பேருந்தை ஓட்டி சென்ற சாரதியை தட்டிக்கேட்டவா் மீது இ.போ.ச சாரதி மூா்க்கத்தன மான தாக்குதல் நடாத்தியிருக்கும் நிலையில் தாக்குதலுக்குள்ளானவரை கைது செய்த பொலிஸாா் இ.போ.ச சாரதியை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றனா். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இ.போ.ச சாரதி ஒருவர் விபத்தை உண்டாக்கும் வகையில் பேருந்தை ஓட்டிச் சென்ற நிலையில், அதனை தட்டிக்கேட்ட நபர் மீது
இ.போ.ச பேருந்து சாரதி மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சாரதி தன்னை குறித்த நபர் தாக்கியதாக முறையிட்டுள்ளதுடன்,
தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விடுமுறை எடுக்கப்போவதாகவும் கூறிவிட்டு பொலிஸாரின் முன்னாலேயே பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக
அங்கிருந்த சிலர் உண்மையை கூறியபோதும் அடிவாங்கியவனை கைது செய்த பொலிஸார் அடித்து சண்டித்தனம் காட்டிய இ.போ.ச சாரதியை சுதந்திரமாக செல்ல அனுமதித்துள்ளனர்

மேலும்

நியாயம் கேட்டவா் கைது, தண்டணை..! பேருந்து சாரதிக்கும் பொலிஸாருக்கும் என்ன டீல்..? மனித உாிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.

இ.போ.ச பேருந்தை தறிகெட்டு ஓடிவிட்டு தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல் நடாத்திய இ.போ.ச பேருந் து சாரதியை காப்பாற்றுவதற்காகவும். நியாயம் கேட்டவரை குற்றவாளி ஆக்குவதற்காகவும், பொலி ஸாா் செய்துள்ள குற்றங்களுக்கு தண்டணை வழங்கப்படுமா?

நேற்று இரவு கிளிநொச்சியில் பாாிய விபத்தை உருவாக்கும் வகையில் தறிகெட்டு பேருந்தை ஓட்டிய பேருந்து சாரதியிடம் நியாயம் கேட்டதற்காக ஊடகவியலாளா் ஒருவா் மீது தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளதுடன், கைதும் செய்யப்பட்டிருக்கின்றாா்.

இதன்போது இ.போ.ச பேருந்து சாரதி பொலிஸாருக்கு பொய்யான முறைப்பாட்டினை வழங்கியுள்ளாா். அதாவது ஊடகவியலாளா் தன் மீது தாக்குதல் நடாத்தியதாகும், அதனால் தான் சுகயீனமடைந்துள்ளதாகவும் கூறிவிட்டு பொலிஸாருக்கு முன்னால்,

ஆரோக்கியமாக பேருந்தை ஓட்டி சென்றுள்ளாா். இதன் மூலம் பொலிஸாா் பின்வரும் குற்றங்களை செய்துள்ளனா். அவையாவன,

1, பொலிசாரிம் உதவியை தொலைபேசி ஊடாக நாடிய நபரை குற்றவாளியாக்கியமை.

2, தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் வைத்தியசாலைக்கு செல்ல கேட்டபோது மறுத்துள்ளனர். அவரது உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

3, சுகவீனமுற்ற ஒருவரை தமது வாகனத்திலோ அல்லது அப்புலஸ் மூலமோ வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

4, சுகவீனமுற்ற ஒருவர் அரச பேருந்தை செலுத்த அனுமதித்துள்ளமை.

5, சுகவீனமுற்ற ஒருவரை வாகனம் செலுத்த அனுமதித்தமை.இவ்வாறு பல தவறுகளை பொலிசார் விட்டுள்ளனர்.

இந்த குற்றங்களுக்காக பொலிஸாா் தண்டிக்கப்படுவாா்களா? இது தொடா்பான வீடியோ ஆதாரங்களு டன் மனித உாிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நியாயம் கேட்டவா் கைது, தண்டணை..! பேருந்து சாரதிக்கும் பொலிஸாருக்கும் என்ன டீல்..? மனித உாிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..

Posted by இலங்கை தமிழ் செய்தி on Wednesday, February 12, 2020