தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பிரித்தானியாவில் சேகரித்த நிதியை இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எடுத்து வந்து ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர் தொடர்பிலும் அவரது குடும்ப உறவுகள் தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.பிறேம்குமார் தொடர்பிலே இந்த தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் வசிக்கும் அவர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் பணியில் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ளார். அதனால் அவர் இலங்கைக்கு திரும்புவதில்லை.

இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு குடும்பத்துடன் இலங்கைக்கு திரும்பியிருந்த அவர், கந்தர்மடத்தில் தங்கியிருந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று திரும்பியுள்ளார்.

அத்தோடு கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்து பலகோடி ரூபா நிதியை மூன்று குடும்பங்களுடன் இணைந்து செலவு செய்துள்ளார்.

அதுதொடர்பில் தமிழக பொலிஸாரிடம் தகவல்கள் கோரப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.