யாழ்.நீர்வேலி பகுதியில் ஊரடங்குவேளையில் வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையிடப்பட்ட சம்பவ த்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் 2 பெண்கள் உள்ளடங்கலாக 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நீர்வேலி பகுதியில் கடந்த 1ம் திகதி அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் வாள்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் 3 லட்சத் து 85 ஆயிரம் ரூபாய் பணம், 2 பவுண் நிறையுள்ள இரு சங்கிலிகள், துவிச்சக்கர வண்டி ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றிருந்தது.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பொலிஸாரும், இரு பொலிஸ் புலனாய்வு பிரிவுகளும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் யாழ்.ஏழாலை பகுதியில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதுடன்,

அவரிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் சுன்னாகம் பொலிஸாரினால் மற்றொரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குறித்த கொள்ளை சம்ப வத்துடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபருமாக 3 ஆண்களும்,

திருட்டு நகைகளை அடகுவைத்தனர் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்களுமாக 5 பேர் சந்தேகத்தினடிப்ப டையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதேவேளை கைது செய்யப்பட்ட நவர்களிடம் கூரிய ஆயு தங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளர்.