இலங்கை தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ‘செல்லா‘ என்று அழைக்கப்படும் பிரதீப் மற்றும் பொலிசார் சிலரின் ஆதரவுடன் வடமராட்சியில் செயற்பட்டு வந்த வாள்வெட்டு ரவுடிக் குழுவின் திருவிளையாடல்கள் தற்போழுது அம்பலமாகியுள்ளன. குறித்த புலனாய்வுத்துறையைச் சேர்ந்த செல்லா உட்பட நெல்லியடிப் பொலிசில் கடமையாற்றும் 4 பொலிசார் தற்பொழுது இடமாற்றப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. வடமராட்சியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடந்த ஓரிரு வருடங்களாக ‘மின்னல்‘ என்று அழைக்கப்பட்டு வந்த ரவுடிக் குழு குழப்பி வந்தது. வாள் வெட்டுச் சம்பவங்கள், கப்பம், மற்றும் கொலை அச்சுறுத்தல், பெண்களுடனான சேட்டைகள் போன்ற பல சட்டவிரோத செயற்பாடுகளை குறித்த மின்னல் குழு செய்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக பொதுமக்கள் பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிசாருக்கு அறிவித்தும் அவர்கள் அதற்கான நடவடிக்கையை சரியாகச் செய்யவி்ல்லை என பொதுமக்கள் ஏற்கனவே விசனம் தெரிவித்திருந்தனர். குறித்த குழுவுக்கும் பொலிசாருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என பொதுமக்கள் கருதி வந்தன்ர்.

இந் நிலையில் இலங்கையின் விசேட பாதுகாப்புத்தரப்புக்கு குறித்த மின்னல் குறுப்பின் அட்டகாசங்கள் தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த மின்னல் குறுாப்பைச் சேர்ந்த முக்கியஸ்தரின் வீடு விசேட பாதுகாப்புத் தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்ட போது பெரும் அதிர்ச்சித் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மின்னல் குறுாப்புக்கும், செல்லா என்ற தேசிய புலனாய்வுதுறையைச் சேர்ந்த ஒருவனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதும் நெல்லியடிப் பொலிசார் சிலரும் அந்த குழுவில் தொழிற்பட்டுள்ளதும் வெளிவந்துள்ளது.

செல்லா என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு உறுப்பினர் பிரதீப்

தன்னை கட்டுநாயாக்காவுக்கு இடமாற்றியதாக செல்லா என்ற பிரதீப் தனது முகப்புக்கதத்தில் வெளியிட்ட பதிவு இது

குறித்த மின்னல் குழுவின் உறுப்பினர்களும் ‘செல்லா‘ என்று அழைக்கப்படும் இலங்கையின் தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த பிரதீப் என்பவனும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தினுள்ளேயே சாராயம் குடித்து மகிழ்ந்துள்ளதும் செல்லா என்ற அந்த அதிகாரி நெல்லியடிப் பொலிஸ் ஜீப்பிலேயே திரிந்து சட்டவிரோத செயற்பாடுகள் செய்துள்ளதும் நெல்லியடிப் பொலிஸ் ஒருவனின் தொலைபேசி ஓடியோ மூலம் வெளிவந்துள்ளது.

செல்லா என்ற அந்த புலனாய்வாளன் 5000 ரூபா லஞ்சம் பெற்று சாரதி அனுமதிப்பத்திரத்தை கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருத்தர் கதைக்கும் ஓடியோ இது…..

செல்லா என்ற புலனாய்வாளனை பிரதீப் சேர் என்று அழைத்து இன்னொருவருடன் கதைக்கும் ஓடியோவில் பிரதீப் எப்படியானவர் என்பது ஓடியோவில் வெளிவந்துள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து சிறப்பு விசாரணைகளை நடாத்திவரும் பொலிஸ் குழுவின் தகவலின் படி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்த போது குறித்த செல்லா தனது குழுவினருக்கு நெல்லியடியில் வசிக்கும் முக்கியஸ்தர்கள் இருவரின் கார்களுக்குள் கஞ்சா வைத்து அவர்களை பிடித்து அவர்களை கேவலப்படுத்தவும் முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் பொலிஸ்தரப்புக்குள்ளால் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைகளை பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

செல்லாவின் ஆதரவுடன் நடந்த குறித்த மின்னல் குறுாப்பினால் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை அப்பாவிகளை இவர்கள் குற்றவாளிகளாக்க முற்பட்டு தமக்கான தேவைகளை நிறைவேற்றினார்கள் என்பதையு்ம் விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

இதே வேளை மின்னல் குறுாப்பில் உள்ளவர்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலின் படி நெல்லிடியடி பொலிசில் கடமையாற்றும் கபில்ரன் என்பவன் ஆவா குழுவில் இருந்தவன் என்றும் அவனை ஆவா குழுவினர் மாஸ்டர் என்றே அழைத்துவந்ததாகவும் அதன் பின்னரே பொலிசில் சேர்ந்துள்ளதாகவும் மின்னல் குறுாப்பின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பினுாடாக தெரியவந்துள்ளது.

இதே வேளை குறித்த செல்லாவும் அவனது சகாக்களும் வெளிநாட்டில் அடைக்கலம் கோர முற்படும் நபர்களுக்காக நெல்லியடிப் பொலிஸ் அதிகாரியின் பெயரிலேயே கடிதம் தயாரித்து அதுவும் ஆவா குழுவில் உள்ளதா குறித்த நபரை சீ.ஐ.டி தேடுகின்றது… அவருக்கு ஆபத்து உள்ளது என்றும் கடிதம் தாயாரித்துக் கொடுத்து பெரும் முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளது. குறித்த ஆவணங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

இதே வேளை செல்லா என்று அழைக்கப்படும் பிரதீப் தனது மனைவியைக் கொலை செய்ததாகவும் அந்தச் சம்பவத்தை தற்கொலை என்று மாற்றியமைத்துள்ளதாகவும் பிரதீப்பின் மனைவியின் இடத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மின்னல் குறுாப்பைச் சேர்ந்தவனும் இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளான். இது தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாண உயர் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் குறித்த காவாலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையின் அச்சாணியாக தொழிற்படும் தேசிய புலனாய்வுப் பிரிவில் இவ்வாறான இருப்புக்கறள்கள் இருப்பது அச்சாணிக்கே ஆபத்தாக அமையலாம். இதே வேளை செல்லா போன்றவர்களால் குறித்த புலனாய்வு அமைப்புக்கு இழுக்கே ஏற்பட்டள்ளது. தேசிய புலனாய்வுத்துறையினர் தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கும் மதிப்பும் மரியாதையும் செல்லா போன்றவர்களால் இல்லாது போய் விடும் என்பதுடன் இலங்கையின் பாதுகாப்பிலும் பெரும் ஓட்டை ஏற்படும் நிலை வந்துவிடும்.