அண்மையில் கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மனைவி தொடர்பாக, அவரது கணவன் பதிவிட்டதாக கூறப்படும் முக நூல் பதிவு ஒன்று இணையங்களில் வெளியாகி வருகிறது. இதில் கணவன் ஏதோ திருந்திவிட்டதாகவும், குடி பழக்கம் ஒன்றே தான் விட்ட தவறு என்றும் எழுதப்பட்டுள்ளது. மனைவியோடு தான் இணைந்து நிற்க்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார், இதனை ஒரு முறை பாருங்கள். 6 வருடங்களுக்கு முன்னர் பேசி கலியாணம் செய்து வைத்தார்கள். இவர் ஏற்கனவே ஒரு ரவுடி. தினம் தினம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை துன்புறுத்தும் ஒரு ரவுடி.

இந்த முகத்திற்கும் முக நூலில் எழுதி இருப்பதாக சொல்லும் பதிவிற்க்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கிறதா என்று சற்று யோசித்துப் பாருங்கள். மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தி, 6 வருடங்களாக, இவன் தொல்லை தாங்க முடியாமல் அவதிப்பட்டு இறுதியில் அவர் தற்கொலை செய்ய. இப்போது பக்கம் பக்கமாக பேஸ் புக்கில் கவிதை எழுதினால், இவன் திருந்திவிட்டான் என்று அர்தமா ? இப்படி தான் யாழ்பாணத்தில் பலர் தமது தவறுகளை மறைத்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் திருந்தப் போவது இல்லை. முக நூலில் நாலு வசனத்தை எழுதினால், உடனே அதனை சில தமிழ் இணையங்கள் போட்டு அவரை ஒரு ஹீரோ ஆக்கிவிடுவார்கள்.

6 வருடங்களாக குடித்து மனைவியை அடித்து துன்புறுத்தி, வார்த்தைகளால் கொன்று. இறுதியில் மனமுடைந்து அவரே தற்கொலை செய்துகொண்ட நிலையில். தனது குடி ஒன்றே இதற்கு காரணம். இனி நான் குடிக்க மாட்டேன் என்று முக நூலில் எழுதினால். போன உயிர் திரும்பி வந்துவிடுமா ? இனியாவது இது போன்ற போலியான வாக்கு மூலங்களை தமிழர்கள் நம்ப வேண்டாம்.

குற்றங்களை செய்துவிட்டு, முக நூல் ஊடாக மன்னிப்பு கேட்ப்பதும். சினிமா பாணியில் எழுதி தன்னை ஒரு நல்லவனாக காட்டுவதையும் சிலர் நம்பலாம். நன்றாக சிந்திக்கும் எவரும் நம்பவே மாட்டார்கள்.