யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத் துவர் ஒருவர் காப்புறுதி பெறுவதற்காக பலருக்கு போ லியா ன மருத்துவ சான்றிதழ்கள் வழங்கியமை குறிப்பாக வேறு மருத்துவர்களின் பெயர்களிலும் வழங்கியமை அம் பலமாகி யுள்ளது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு விடுதியில் தங்கியிருந்தும் சிகிச்சை பெற்றதாக ஒரு வைத்தியரின் ஏற்பாட்டில் போ லி யாக சான்றிதழ் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சான்றிதழைப் பயன்படுத்தி காப்புறுதி நிறுவனத்தில் இருந்து பணம் பெறப்பட்டுள்ளது.

மேலும் அந்த வைத்தியரிடமிருந்து அண்மை நாட்களில் ஐந்திற்கும் மேற்பட்டவர்களிற்கு ஒரே வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டதமை தொடர்பில் அவதானித்த காப்புறுதி நிறுவனம் அந்த மருத் துவர் பணியாற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு சான்றிதழ்களின் பிரதியினையும் கான்பித்துள்ளனர்.

இவ்வாறு காப்புறுதி நிறுவனம் கான்பித்த சான்றிதழில் இருந்த அனுமதி இலக்கம், பெயர் விபரங்களைக்கொண்டு வைத்தியசாலை நிர்வாகம் பதிவேடுகளை பரிசோதனை மேற்கொண்ட சமயம் பல அ தி ர் ச்சிகரமான தகவல்களும் வெளி வந்துள்ளன.

அதாவது சான்றிதழை வழங்கிய வைத்தியரின் பெயரில் மட்டுமல்லாமல், வேறு வைத்தியர்களின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இதனால் அவ்வாறு தமது பெயரை பயன்படுத்தியமை தொடர்பில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்களும் போ ர்க்கொ டி தூக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் விசா ரணை யில் ஈடுபட்டு தீர்வினை வழங்க வேண்டும் என பெண் மருத்துவர் ஒருவர் செய்த மு றை ப்பாடு மாவட்ட மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவுள்ளது.

இது தொடர்பில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த ஓர் மு றை ப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. என்பதனை உறுதி செய்தார்.