காணி பார்ப்பதற்கென அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்தார் என அவர் மீது மனைவழ செய்த முறைப்பாட்டையடுத்து, 4 மாதங்களின் பின்னர் தந்தையை பலாலி பொலிசார் கைது செய்துள்ளனர்.

மகளை தந்தை துன்புறுத்திய சம்பவம் 4 மாதங்களின் முன்னர் நடந்துள்ளது. அப்பொழுது முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், தந்தை வீட்டிலிருக்காததால் அவர் கைது செய்யப்படவில்லை.

தொழில் நிமித்தம் வன்னியில் தந்தை தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு அவர் வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பகுதியில் வசிக்கும் இந்த குடும்பம், மயிலிட்டியிலுள்ள தமது வீட்டை பார்க்க சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளாங்காய் பறித்து தருவதாக கூறி மயிலிட்டியில் மகளை பற்றைக்குள் அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தந்தையிடமிருந்து தப்பித்த மகள், தாயாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இது தொடர்பில் தாயார் பலாலி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.