அண்மையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவல் அனைவரையும் வாயில் விரல் வைக்க வைத்தது.

34வயதான பெண் தனது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அங்கு குழந்தைக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த பெண், தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக வைத்தியர்களிடம் புகார் அளித்துள்ளார்.

வைத்தியர்களும் பெண்ணிற்கு உதவி புரியும் நோக்குடன், கணவரை ஆலோசனை கொடுப்பதற்காக அழைத்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு வந்த கணவர் தனது பக்க விவாதங்களை தெரிவித்துள்ளார்.

இறுதியாக மன நல வைத்தியரிடம் ,குறித்த பிரச்சினைக்கு தீர்விற்காக இருவரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு குறித்த 34 வயதான ஒரு குழந்தையின் தாய் தெரிவித்த ஆதங்கங்கள் எல்லோரையும் திகைக்க வைத்துள்ளது.

தனக்கு ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதற்கு ஆசை ஏற்படுவதாகவும், இதற்கு தனது கணவர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் கூறி அழுதுள்ளார்.

நிலைமையை புரிந்து கொண்ட மனநல வைத்தியர் குறித்த பெண்ணிற்கு ஓர் சிறந்த தீர்வொன்றை வழங்கியதுடன் கணவன் மனைவி இருவரும் சந்தோசமாகவும் இருக்கச்செய்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார்.