அதிரடியாக தடுக்கப்பட்ட கொலை முயற்ச்சி!!!

பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து களுத்துறை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான காரை துரத்திச் சென்ற பொலிஸார் தல்பிட்டிய பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, எதிரணியினை கொல்லும் நோக்கில் இந்த குழு பயணித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸாரன் விசேட பயிற்ச்சி பெற்ற மோட்டார் ஓட்டுனர்கள் குறித்த காரினை 05 கிலோ மீற்றர் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். அதில் காரிலிருந்த மூவர் தப்பிச் சென்றுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் காரிலிருந்து 06 கூரிய வாள்கள், 05 முக மூடிகள் மற்றும் 04 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

Related Posts