
அதுல்யா ரவி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!
பவ்யமான அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப்பின்பு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது இத விதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது பிரபல அட்டை படத்திற்கு ஒயிட் வெட்டிங் கௌன் அணிந்து கார்ஜியஸ் அழகியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல் இருப்பதாக விமர்சித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.




