கோகினூர் வைரத்தோடு முடி சூட வேண்டாம் என இந்தியா வற்புறுத்தி வருகிறதா ? பெரும் சிக்கல் !

பிரிட்டன் மன்னரான சார்லஸிற்கு இன்னும் ஆறு மாதங்களில் முடி சூட்டு விழா நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் அதிக ஆடம்பரம் இருக்காது எனவும் மிக எளிய முறையில் நடத்த வேண்டும் என்றும் அரண்மனை வட்டாரம் விவாதித்துக் கொண்டிருக்கிறது. இதில், தற்போது கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்தும் விவாதம் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், அதற்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த விழாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் சடங்குகள் குறைக்கப்படும் எனவும் வருகை தரும் விருந்தினர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழா நடத்துவதற்கு 100 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்யப்படும் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதேவேளை மகாராணியாரின் கிரீடத்தில் உள்ள சர்சைக்கு உரிய கோகினூர் வைரம் தொடர்பாகவும், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அணிய இந்திய அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது. இதனால் கமீலா இதனை அணிவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Related Posts