போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் மாணவர்களை சீர்திருத்த கோரிக்கை!!!

போதைப்பொருள் பாவணை தொடர்பாக கைது செய்யப்படும் மாணவர்களை சிறையில் அடைப்பதை தவீர்த்து, சரியான மருத்துவத்தினை பெற்றுக் கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரோக்கியத்துக்கான இளையோர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, வடமாகாண இளைஞர் யுவதிகள் மத்தியில் ஜஸ், கஞ்சா போன்ற உயிர்கொல்லி போதைப்பொருள் பாவணை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது.

எனவே இவற்றுக்கு அடிமையாகும் பாடசாலை சிறார்களை கைது செய்து சிறையில் அடைப்பதனை தவீர்த்து, அவர்களுக்கு சரியான மருத்துவத்தினை பெற்றுக் கொடுப்பதுடன் கவுன்சிலிங் மூலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவதற்கான சீர்திருத்த பணியினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடத்துள்ளது.

Related Posts