முற்ச்சக்கர வண்டி சாரதி மீது வாள்வெட்டு!!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முற்ச்சக்கர வண்டி சாரதி மீது வாள்வெட்டு தாக்குதலினை மேற்கொன்ட குழுவினை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாள்வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த முற்ச்சக்கர வண்டி சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொக்குவில் வராகி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஜந்து பேர் தலைமறைவாகி உள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றப் புலணாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.

Related Posts