
யாழ்ப்பாணம் மாணிப்பாயினை சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான காணியினை உழவுக்கு உட்படுத்திய வேளையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்களை அவதானித்தார். இதனையடுத்து மாணிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த காணியினை சோதனையிட்டபோது அதிகளவிலான கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.