
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இன்று நாவலப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்ச்சியின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த முன்னால் பிரதமர் மகிந்த சாஜபக்ஷவிற்கு எதிராக எதிர்க்கட்ச்சியான ஜக்கிய மக்கள் சக்தியினால் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
எனவே, போராட்ட இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் குறித்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், அதிலிருந்து கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
பொலிஸாரின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாததால் இரு தரப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து குறித்த போராட்டத்திற்கு தலமை தாங்கிய ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.