
மக்கள் ஒருபோதும் மகிந்த ராஜபக்ஷவினை வீட்டுக்கு போகசொல்லவும் இல்லை மற்றும் அவரினை எதிர்க்கவும் இல்லை. எனவே அவர் மீண்டும் நாட்டின் பிரதமராக உதயமாகுவார் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முனனால் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குளப்பம் காரணமாக சற்று விலகி இருக்கின்றாரே தவீர அவரை மக்கள் வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தவில்லை எனவே அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கு எந்த பிரச்சிணையும் கிடையது என தெரிவித்தார்.