உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது நேற்று ரஷ்யா படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின. இதில் அங்கு மிகப்பெரிய அளவில் தீப்பற்றியதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கீவ் நகர கவர்னர் ஒலெக்சி குலேபா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க ரஷ்யா ராணுவம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மின் உற்பத்தி நிலையில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனவும், கீவ் நகரில் வசிப்பவர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள 3 பிராந்தியங்களை சேர்ந்த மக்கள் மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.