வயசானாலும் உங்க அழகு குறையவே இல்ல – கொழுக் மொழுக் லுக்கில் ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

தமிழ் சினிமாவில் மிகவும் திறமை வாய்ந்த நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார். எந்த ரோலாக இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் வாங்குவார்.

தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணன் 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகனை பெற்றெடுத்தார். இந்நிலையில் தற்போது மாடர்ன் சேலையில் செம அழகாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைபடங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Related Posts