
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் 22வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கப் போவதாக உறுதியளித்துள்ளார். நேற்று நடைபெற்ற தமது கட்ச்சியின் தலைமைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, ஏற்கனவே வரையப்பட்டுள்ள யாப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எண்ணப்படி செயற்பட இடமளிக்கமாட்டோம். அதாவது, ஏற்கனவே காணப்படும் இரட்டை குடியுரிமை கொன்டோர் பாராளுமன்றத்தில் உறுப்புரிமை வகிக்க கூடாது வேனுமென்றால் பசில் ராஜபக்ஷ போன்றோர் அமெரிக்கா பாராளுமனறத்தில் இடம் தேடிக் கொள்ளட்டும் எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தினை கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என அதிளவிலான ஊறுப்பினர்களின் ஆதரவு கிடைக்குமாயின் இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுக்க முடியாது. எனவே அடுத்த வருடம் தேர்தல் நடைபெறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகளவாக காணப்படுவதாகவும், தாம் அதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.