இலங்கையில் பசும்பாலினை விட குடி நீருக்கான விலை அதிகம்!!!

மட்டக்களப்பு மண்டுர் பிரதேச பால் உற்ப்பத்தியாளர்கள் கடந்த காலங்களில் 10 தொடக்கம் 20 லீற்றர் பால் கறக்கும் மாடுகளை தாம் வளர்த்து வந்ததாகவும் தற்பொழுது மாடுகளுக்குரிய உணவு வகைகள் மற்றும் மருந்துப் பொருட்கள் என்பவற்றின் விலைகள் பாரியளவில் அதிகரித்ததன் காரணமாக அதிகமானோர் தமது மாடுகளை விற்பனை செய்து கொன்டு வருகிறனர் என தெரிவித்துள்ளனர்.

தற்போது ஒரு லீற்றர் தண்ணீர் போத்தலின் விலை 160 ரூபாயாக காணப்படும் அதேவேளை ஒரு லீற்றர் பாலின் விலை 110 ரூபாயாக காணப்படுவதனால் தம்மால் பால் உற்ப்பத்தியினை மேலும் அதிகரிக்க முடியாதுள்ளதாக குறித்த பிரதேச பால் உற்ப்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

எனவே அரசாங்கம் இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொன்டு தமது வாழ்வாதாரத்தினை அதிகரிப்பதற்குரிய வழிமுறைகளை செய்து தருமாறு கேட்டுக்கொன்டுள்ளார்கள்.

Related Posts