கிளிநொச்சியில் ஆண் குழந்தை திடீர் உயிரிழப்பு – பெற்றோர்களே அவதானம்!!!!

கிளிநொச்சி கணேசபுரத்தில் ஏழுநாள் காய்ச்சலால் பிறந்து எட்டு மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

கடந்த ஏழு நாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டதால் கடந்த 14 ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

குறித்த குழந்தை சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளது.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே, பெற்றோர்கள் அனைவரும் குழந்தை விஷயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

 

 

 

Related Posts