டெங்கு நோய் தொடர்பாக அபாய எச்சரிக்கை…..

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திம் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுமிடத்து மும்மடங்காக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, கொழும்பு, ஹம்பகா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கண்டி, காலி, யாழப்பாணம், கேகாலை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுமிடத்து அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் இப் பிரதேசங்கள் எச்சரிக்கை நிறைந்த வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts