தாய்லாந்து மசாஜ் பார்லரில் லண்டன் தமிழர் இறந்து கிடந்தார்- தாய் பொலிசார் அறிவிப்பு !

லண்டனில் பல சரக்கு கடை ஒன்றை நடத்தி வரும், முதலாளி ஒருவர் தாய்லாந்தில் உள்ள மசாஜ் பார்லரில் பிணமாக கிடந்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. 47 வயதாகும் இன் நபர், தான் சிங்கப் பூர் செல்வதாக கூறி விட்டு தாய்லாந்து சென்றுள்ளார். இதனை அவரது மனைவி , தாய் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். அங்கே என்ன நடந்தது என்பது தெரியவில்லை. தாய் பொலிசார் நடத்திய விசாரணையில், அவர் மசாஜ் செய்யும் இடத்தில் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார்கள். கால் மற்றும், தொடைப் பகுதியில் அடி காயம் இருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது. இது குறித்து மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.

Related Posts