
இலங்கையில் இருந்து 04 படகுகளில் வந்த சுமார் 20 பேர் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொன்டிருந்த இந்திய மீனவர்கள் மீது கடுமையான தாக்குதலினை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதாவது, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொன்டிருந்த சுமார் 11 மீனவர்கள் இவ்வாறு இலங்கையில் இருந்து வந்தவர்களால் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேற்படி, காயத்திற்கு உள்ளாகியவர்கள் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.