மினி பட்ஜெட் கேன்சல்: மீண்டும் மக்கள் மீது கடும் வரிச் சுமையை போட்ட புது திறைசேரி அமைச்சர் !

கடந்த 2 தினங்களுக்கு முன்னர், பிரித்தானிய பிரதமர் லிஸ் ரஸ் தனது திறைசேரி அமைச்சரை பதவியில் இருந்து தூக்கினார். புதிதாக ஜேரமி என்னும் நபரை திறை சேரி அமைச்சராக நியமனம் செய்தார். இன் நிலையில் புது திறை சேரி அமைச்சர், முன் நாள் அமைச்சர் போட்ட மினி பட்ஜெட்டை கேன்சல் செய்வதாக அறிவித்துள்ளதோடு. அதில் இருந்த பல நல்ல திட்டங்களை, செயல்படுத்த விடாமல் தடுத்துள்ளார். இதற்கு அமைவாக, மக்களின் வேலை வரி, குறையாது என்று அறியப்படுகிறது.

முன் நாள் அமைச்சர் மக்களின் வேலை வரிப்பணத்தை குறைப்பதாக அறிவித்தார். இதனால் மக்கள் உழைக்கும் காசு கொஞ்சமாவது கையில் தேறும். ஆனால் தற்போதைய அமைச்சர் அந்த திட்டத்தை செயல்படுத்த தடை விதித்துள்ளார். மேலும்…

பல வரிகளை தாம் அறிமுகப் படுத்த உள்ளதாகவும், தற்போதைய திறைசேரி அமைச்சர் தெரிவித்துள்ளார். இவரது கருத்துகள் மக்கள் தலையில் இடியாக விழுந்துள்ளது.

Related Posts