யாழில்… புடவைக் கடையில் வேலை செய்தவர்கள் அதிரடிக் கைது!!!

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் நகர்ப்பகுதியில் வைத்து ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், யாழ் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள மூன்று புடவைக் கடைகளில் வேலை செய்து கொன்டு போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து மேலதிக விசாரணையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts