பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பு ஏற்றுள்ள லிஸ் ரஸ் அம்மையாரை, வீட்டுக்கு அனுப்பியே தீருவேன் என்று அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்கள் போர் கொடி தூக்கியுள்ளார்கள். இதனால் லிஸ் ரஸ் பலத்தை இழந்துள்ளார். இன் நிலை நீடித்தால் இன்னும் சில வாரங்களில் லிஸ் ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப் படுவார் என்று கூறப்படுகிறது. லிஸ் ரஸ் அம்மையாரை நம்ப முடியவில்லை என்பது தான், அவரது சொந்த கட்சி உறுப்பினர்களின், பிரச்சனையாக உள்ளது. காரணம் காலையில் ஒரு நிலைப்பாடு, பின்னர் மாலையில் வேறு ஒரு நிலைப்பாடு என்று அன்னியன் “”அம்பி”” போல மாறி விடுகிறார் லிஸ் ரஸ்… இதனால்..
ஒரு திட்டத்தை அறிவிப்பதும், பின்னர் அந்த திட்டத்தை நடைமுறை படுத்த முடியாது என்று கூறுவதுமாக உள்ளார் லிஸ் ரஸ். இதனால் பல உறுப்பினர்கள் திகைப்பில் உள்ளார்கள். மேலும் பலர் இவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று, திட்டம் போட்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதனால் நாடு மட்டும் அல்ல… நாட்டு மக்கள் கூட பெரும் குழப்பத்தில் உள்ளார்கள்.