விமானங்களை அடித்து வீழ்த்தி விடும் Space-X: எலான் மொஸ்க் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு !

எலான் மொஸ்க், இன் நபரைப் பற்றி நாம் கேள்விப்படாமல் இருக்க முடியாது. இவரே டெஸ்லா காரின், உரிமையாளர். டெஸ்லா என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அமெரிக்க விஞ்ஞானி. அவரின் பெயரை தான் எலான் மொஸ்க் தனது காருக்கு டெஸ்லா என்று வைத்துள்ளார். மனித குலத்தின் முன்னோடி என்று எலான் மொஸ்க் சொன்னால் அது மிகையாகாது. டெஸ்லா கார் விற்பனையில் வரும் பெரும் தொகைப் பணத்தை எடுத்து. அதில் ஸ்பேஸ்X என்ற திட்டத்தை அவர் செயல்படுத்தி வருகிறார். முதலில் 3,000 ஆயிரம் சிறிய சாட்டலைட்டுகளை விண்ணில் ஏவி, அதனூடாக Starlink என்னும் ஒரு இன்ரர் நெட் வலைக் கட்டமைப்பை முதல் முறையாக உருவாக்கியுள்ளார்.

Starlink என்றால் என்ன ? :::::::::::

மொத்தமான 13,000 ஆயிரம் மிகச் சிறிய சாட்டலைட்டுகளை விண்ணில் ஏவ, இவரிடம் அனுமதி உண்டு. ஆனால் 40,000 ஆயிரம் சாட்டலைட்டை ஏவ வேண்டும். அப்படி என்றால் தான், Starlink ஒழுங்காக வேலை செய்யும் என்று கூறி, புதிதாக ஒரு விண்ணப்பத்தை செய்துள்ளார் எலான். இதனால் விண் வெளியில் பெரும் நெரிசல் ஏற்படும் என்றும். சில சாட்டலைட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, பூமியில் வீழ்ந்தால், அது பறக்கும் விமானம் மீது விழுந்து பெரும் ஆபத்தை தோற்றுவிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதுவரை பூமியில் உள்ள மக்கள், கணாத, மாபெரும் இன்ரர் நெட் வலை அமைப்பை எலான் அமைத்து வருகிறார். இதேவேளை இவர் தயாரித்துள்ள ஸ்பேஸ்X என்ற ராக்கெட்டுகள் தான் உலகில் அதிக அளவு எடை கொண்ட பொருட்களை காவிச் செல்ல வல்லது. அமெரிக்காவின் நாசாவிடம் கூட இல்லாத, ராக்கெட் எஞ்சின் எலானிடம் உள்ளது. அது போக நாசா தொழில் நுட்ப்பத்தை காட்டிலும், எலானின் தொழில் நுட்ப்பம் மிகவும் சக்த்திவாய்ந்தது. எலான் அமைத்துள்ள ராக்கெட் எஞ்சில், செவ்வாய் கிரகத்திற்கு பொருட்களை காவிச் சென்று, மீண்டும் பூமிக்கு திரும்ப வல்லது என்றால் பாருங்களேன்.

அந்த அளவு எலான் வளர்ச்சி கண்டுள்ளார். இன் நிலையில் உலக நாடுகளே எலானை பார்த்து , அச்சமடைந்துள்ளது. தனது திறமையைக் காட்ட எலான் நிலாவுக்கு டெஸ்லா காரை அனுப்பி, அதனை அங்கே ஓடிக் காட்டியும் உள்ளார். உலகில் மிக மிக சக்திவாய்ந்த இன்ரர் நெட் வலை அமைப்பை எலான் தற்போது உருவாக்கியுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் இது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த Starlink மக்கள் சேவைக்கு விடப்பட உள்ளது.

Related Posts