இந்திய சர்வதேச திரைப்பட விழா : பிரபல பாடகி யொஹானிக்கு விருது-!

கடந்த 13ஆம் திகதி இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல பாடகி யொஹானி டி சில்வாவுக்கு  விருது வழங்கப்பட்டுள்ளது.

கலாசார மேம்பாட்டில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கௌரவ விருதைப் பெறுவது குறித்து தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும், தன்னுடைய பாடல்கள் இவ்வாறான பெருமைகளை ஏற்படுத்தித் தருவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் யோஹானி தெரிவித்துள்ளார்.

‘மணிகே மகே ஹிதே’ பாடலின் ஹிந்தி பாடலும் இந்த நாட்களில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ளது.

Related Posts