பணத்தை மோசடி செய்த திலினி பிரியமாலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திலினி பிரியமாலியின் காதலன் கைது செய்யபட்டுள்ளார்.
திலினி பிரியமாலியின் காதலன் என கூறப்படும் வர்த்தக பங்காளரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சீ.ஐ.டி) கைது செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதாக கூறி சந்தேகநபர்களான திலினியும் காதலனும் தன்னிடம் 60,000 அவுஸ்திரேலிய டொலர்கள், 100,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் ஒரு கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கத்தை மோசடி செய்துள்ளதாக கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர், சீஐடியில் முன்னர் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த மோசடி சம்பவம் தொடர்பில் சீ.ஐ.டியினர் வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் சந்தேகநபர் சீ.ஐ.டி அலுவலகத்துக்கு வந்துள்ளார்.
அவரிடம் 9 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைக்கு மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், மாலை 6.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.