இலங்கையில் எரிபொருளின் விலை குறைப்பு – காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!!

எரிபொருளின் விலை நேற்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 40 ரூபாவாலும், ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலையை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் புதிய விலையாக 370 ரூபாவாகவும், ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலையாக 415 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிபேட்கோ நிறுவனத்தின் விலை குறைப்புக்கு அமைய, தமது நிறுவனமும் எரிபொருளின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts