தமிழரான ஜோர்ஜ் அழகையா கான்சரில் இருந்து மீண்டார்: மீண்டும் செய்தி வாசிக்க ஆரம்பித்தார் !

ஈழத் தமிழரான ஜோர்ஜ் அழகையா, பிரித்தானியாவின் BBC தொலைக்காட்சியில் பல வருடங்களாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அவரது செய்தி வாசிக்கும் திறன் பல ஆங்கிலேயர்களுக்கு பிடித்தும் இருந்தது. அவர் மிகவும் புகழ்பெற்ற செய்தி அறிவிப்பாளராக இருந்து வந்த நிலையில். அவரை புற்று நோய் தாக்கியது. இதனால் 2 வருடங்களுக்கு மேலாக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். அந்த சிகிச்சை தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில். அது ஒரு நரகம் என்று தெரிவித்துள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி எரிவது போல இருக்கும். அந்த நாட்களை நான் மறக்க நினைக்கிறேன் என்று ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் மீண்டும் BBC செய்திச் சேவையில் இணைந்து, செய்திகளை வாசித்து வருகிறார். அவர் மீண்டும் வந்தது தொடர்பாக பல பிரித்தானிய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள் மக்கள்.

Related Posts