பிரித்தானியாவில் உள்ள இளைப்பாறிய வான் படை விமானிகள் 30 பேரை சீன அரசு தனது நாட்டிற்கு வரவளைத்துள்ளது. பிரித்தானியாவின் றோயர் ஏர்-போஸ் விமானப் படையில் பணியாற்றி விட்டு இளைப்பாறிய 30 விமானிகளை, சீன அரசு தனது நாட்டுக்கு வரவளைத்துள்ளது. அவர்களுக்கு தலா 2லட்சத்தி 50,000 ஆயிரம் பவுண்டுகளை வருடம் தோறும் சம்பளமாக தருவதாக சீன அரசு கூறி, அவர்களை தமது நாட்டுக்கு வரவளைத்து. சீனாவில் உள்ள விமானிகளுக்கு பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. இந்த விடையத்தை அறிந்த பிரித்தானிய விமானப்படையினர் மற்றும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் அதிர்சியில் உறைந்து போய் உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய மற்றும் நேட்டோ நாடுகளின் விமானங்களை எப்படி சுட்டு வீழ்த்துவது என்று, பிரித்தானிய விமானிகள் சீன விமானிகளுக்கு பயிற்ச்சி கொடுத்து வருகிறார்கள். குறித்த 30 பிரித்தானிய விமானிகளும், பல அதி நவீன தாக்குதல் விமானங்களை செலுத்திய அனுபவம் மிக்க நபர்கள் ஆவர். இவர்களே தற்போது சீனாவின் விமானிகளை பயிற்றுவித்து வருகிறார்கள். விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், வேறு நாடுகளுக்கு சென்று வேலை பார்க்க கூடாது என்று, முன்னரே இவர்களுக்கு சொல்லப்படவில்லை. மேலும் அது போன்ற கான்ராக்ட் எதுவும் இல்லை. இதனால் இவர்கள் சென்று பயிற்ச்சி கொடுப்பதை, பிரித்தானிய அரசால் தடுக்கவும் முடியவில்லை.