
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண வசதிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இதற்கு தேவையான போதியளவான நிதியினை நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி மக்களுக்கு தேவையான உணவு, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய வசதிகளை உடனடியாக பெற்றுக் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.