2 இலட்சம் வேண்டாம்.. நாங்கள் 5 இலட்சம் தருகிறோம் எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்!!!

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்த காலத்தின்போது காணமால் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தரும்படி அவர்களின் உறவுகள் கொழும்பில் உள்ள ஜக்கிய நாடுகள் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில். நாங்கள் 13 வருடகாலமாக எங்கள் பிள்ளைகளை மீட்பதற்கு அலைந்து திரிகின்றோம் ஆனால், எங்களுக்கு சரியான தீர்வினை பெற்றுக் கொடுக்க யாரும் முன்வரவில்லை அதன் காரணமாக நாங்கள் இன்று உங்களைத் தேடி வந்துள்ளோம் என தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தற்போழுது தமது பிள்ளைகளுக்கு இழப்பீடாக 2 இலட்சம் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் எங்களுடைய பிள்ளைகளின் பெறுமதி அவர்களுக்கு தெரியாது எனவே இதற்குப் பதிலாக நாங்கள் உங்களுக்கு 05 இலட்சம் தருகின்றோம் எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.

Related Posts