
நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!
ஹோம்லி அழகியாக கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமானார். 2020 பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்றி, நான்காவதாக வந்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் தற்போது அழகிய சுடிதாரில் டீசண்ட் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.



