இலங்கையில் எரிபொருள் விநியோக சேவையை சீர்குழைத்தால் அதிரடி  நடவடிக்கை – அமைச்சர் கஞ்சன!!

ஊழியர்கள் எவரேனும் அல்லது தொழிற்சங்கம் எரிபொருள் விநியோக சேவையை சீர்குழைத்தால் சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

எரிபொருள் சேவை கடந்த ஆறு மாத காலப்பகுதியில் அத்தியவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மசகு எண்ணெய் உற்பத்தி தொடர்பான விசேட ஒழுங்கு விதிகள் திருத்த சட்ட மூலம்; மீதான விவாதம் நேற்று (18) ஆரம்பமானது.

Related Posts