கிறிஸ்மஸ் பண்டிகையினை ஆடம்பரமாக கொன்டாட வேண்டாம்…. கத்தோலிக்க பேராயர் அழைப்பு!!!!

இந்த வருடம் கிறிஸ்மஸ் பண்டிகையினை மிக எளிமையாக கொன்டாடுமாறும், ஆடம்பரமான செலவுகளை தவீர்க்குமாறும் கிறிஸ்தவ மக்களுக்கு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருட பண்டிகையானது பசித்திருப்பவர்களுக்கு உணவளிப்பதாக அமைய வேண்டும் என்றார், அதாவது, நாட்டின் நிலமையினை கருத்தில் கொன்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களை அலங்கரிப்பதற்காக பணத்தை வீணாக்க கூடாது. பசியில் வாடுபவர்கள் ஏராளம், எனவே இந்த ஆண்டு பண்டிகையானது ஏழை மக்களுக்கு உதவுவதாக அமையவேண்டும் என தெரிவித்தார்.

Related Posts