
அமெரிக்காவில் இருந்து இலங்கையை கட்டுநாயக்கா விமான நிலையத்தினை வந்தடைந்த 26 வயதுடைய குறித்த பெண்ணின் சந்தேகத்திற்கு இடமான நடத்தையினைக் கொன்டு அவரை சோதனைக்கு உட்படுத்தியதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த பெண் 13 கோடி பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப் பொருளினை உணவுப் பொருட்கள் என பெயரிடப்பட்ட ஜந்து தகரப் பேணிக்குள் வைத்து இலங்கைக்கு கொன்டுவந்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் சுங்கத் திணைக்கள அதிகாரியினால் கைது செய்யப்பட்டு போதைப் பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.