
எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார கட்டமைப்பு வழமைக்கு திரும்பவில்லை மாறாக பாரிய விலையேற்றத்தினால் நாட்டு மக்களின்; பவணை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 10 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளது. நாட்டு மக்கள் தற்பொழுது அத்தியாவசிய தேவைகளை குறைத்துக் கொன்டு மிகவும் இக்கட்டான நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மக்களது போராட்ட கலவரம் முடியவில்லை மீண்டும் வெகு விரைவில் தோற்றம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒரு மாத இறக்குமதி செலவு 1900 மில்லியனாக காணப்பட்டது ஆனால், தற்பொழுது அந்த தொகை 1600 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது அதேநேரம் மாதாந்தம் செலுத்தும் கடன்களை செலுத்தமுடியாமல் காணப்படுவதனால் எதிர்காலத்தில் எந்தவொரு நாடும் இலங்கைக்கு கடனுதவிகளை வழங்க முன்வராது எனவும் எதிர்காலத்திர் நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டார்.