திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ளது கஸ்தம்பாடி என்ற கிராமம்.. இந்த பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ்.. இவர் அப்பா ஏழுமலை ஒரு கூலி தொழிலாளி. சாம்ராஜுக்கு 20 வயதாகிறது.. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார்… கடந்த 1 மாதத்துக்கு முன்பு திடீரென இந்த வேலையை விட்டுவிட்டு, சொந்த கிராமத்துக்கே வந்துவிட்டார் சாம்ராஜ். இவர் அதே பகுதியில் சேர்ந்த 17 வயது பிளஸ்௨ மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.. கடந்த 13-ம் தேதி அந்த பெண்ணை, யாருக்கும் தெரியாமல், படவேடு மலைக்கோட்டை கோயிலுக்கு அழைத்து சென்றிருக்கிறார். திடீர்னு ஸ்கூலில் இருந்து, மாணவியின் அப்பாவுக்கு போன் வந்தது.. முக்கியமான டெஸ்ட் இருப்பதால், மாணவி ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று கேட்டுள்ளனர்.
எங்கே போயிருப்பாள் என்று தெரியலையே” என்று பதைபதைத்து சொன்னார்.. பிறகு மகளை எங்கெங்கே தேடியலைந்தார்.. அன்று மாலை, ஸ்கூல் முடிந்து வருவதுபோல், எதுவுமே தெரியாததுபோல், வீட்டுக்குள் இயல்பாக நுழைந்தார் மாணவி.. ஆத்திரத்தில் இருந்த அப்பா, எங்கே போனாய்? என்று கேட்டு கன்னத்தில் அறைந்திருக்கிறார்… அப்போதுதான், சாம்ராஜ் விஷயமே வெளியே வந்தது. அவருடன் கோயிலுக்கு சென்றதாக சொல்லி உள்ளார்.. இதை கேட்டு அதற்குமேல் ஷாக் ஆன அப்பா, கண்டபடி திட்டி உள்ளார்.. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் ஓடிச்சென்று குதித்துவிட்டார்.. உடனே அக்கம், பக்கத்தினர் மாணவியை உடனடியாக மீட்டுவிட்டதால் அவர் உயிர்பிழைத்துவிட்டார்… பிறகு, மகளுக்கு பெற்றோர் பொறுமையாக அட்வைஸ் செய்தார்கள்.. பிளஸ் 2 முடித்ததுமே சொந்தக்கார பையனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவது என்றும் பேசி முடிவெடுத்ததாக தெரிகிறது. இந்த விஷயம் சாம்ராஜுக்கு தெரிந்து விட்டது.
அதனால், தன் நண்பர்களுடன், மாணவியின் வீட்டுக்கு சென்று, தன்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது, அப்படி மீறி திருமணம் செய்தால், இருவரும் தனிமையில் இருக்கும்போது எடுத்துக்கொண்ட வீடியோ, போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவதாகவும் மாணவியிடம் மிரட்டி உள்ளார்.. இதனால் பயந்துபோன மாணவி, இந்த போட்டோ, வீடியோ குறித்து தன் அப்பாவிடம் சொல்லி அழுதுள்ளார்.. அதற்கு அப்பா, வீட்டிற்கு பெண் கேட்டு வருவதுபோல, சாம்ராஜை வர சொல்லுமாறு மகளிடம் சொல்ல, அதன்படியே சாதுர்யமாக பேசி சாம்ராஜ்ஜை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் மாணவி. ஆசை ஆசையாய் சாம்ராஜ் வீட்டிற்குள் நுழைந்தால், அவரை தனியே எடுத்து சென்று கும்மு கும்மென்று குமுறி எடுத்துள்ளார்.. இதில் வலி தாங்க முடியாமல் சாம்ராஜ் கதறி அழுதுள்ளார்.
செல்போனை வலுக்கட்டாயமாக பிடுங்கி, அதில் இருந்த மகளின் வீடியோ, போட்டோக்களை, அப்பா அழித்துள்ளார்.. அதற்கு பிறகு சாம்ராஜை அடித்து அங்கிருந்து விரட்டிவிட்டார்.. ஏற்கனவே காதல் முறிந்துபோன அப்செட்டில் இருந்த சாம்ராஜ், அடித்து விரட்டியதால் மனமுடைந்து போய், வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலையும் செய்து கொண்டார். இதையடுத்து, சடலத்தை மீட்ட இளைஞரின் உறவினர்கள், களம்பூர் ஸ்டேஷனை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், மாணவி பிளஸ்௨ தான் படிக்கிறார்.. மைனர் பெண்ணும்கூட.. அவர்கள் தரப்பில் புகார் அளித்திருந்தால், சாம்ராஜ்ஜை போக்ஸோவில் கைது செய்திருப்போம்.. ஆனாலும், மாணவியின் அப்பா அவரை அடித்தது தவறு.. அதனால், இதுசம்பந்தமாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம், போராட்டத்தை கைவிடுங்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தியதும், கலைந்து சென்றனர்.. இது சம்பந்தமாக போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.