அம்பலாங்கொடை மாதம்பை ஆற்றில் குளித்துக் கொன்டு இருக்கும் போது திடிரென ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக அதில் மூவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு மாணவர் கடும் சிரமங்களுக்கு மத்தியில் காப்பாற்றப்பட்டதுடன் ஏனைய இருவரும் நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மற்றயவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.